திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்... நொடிப்பொழுதில் தப்பிய வாலிபர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் மழையால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. காரிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக 4 வாலிபர் உயிர் தப்பினர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

தென் மேற்குப் பருவமழை வட மாநிலங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், அஸ்ஸாம், பங்களா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை வட மாநிலங்களின் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாமில் 10.17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.17 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட்  மாநிலத்தில்  கொட்டித்தீர்க்கும்  மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹல்ட்வானி என்ற பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் ஆட்டோ  வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. காரில் இருந்த 4 பேர் உடனடியாக குதித்து தப்பினர். வெள்ளத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஆட்டோ வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. நொடிப்பொழுதில் அந்த 4 வாலிபர்கள் உயிர் தப்பினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!