என்.ஆர்.சி பெயர் பட்டியலில் விடுபட்ட குடியரசு முன்னாள் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் குடியரசு முன்னாள் தலைவரின் குடும்பத்தினருடைய பெயர்களே விடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அஸ்ஸாம் மாநிலத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிப்பவர்களில் இந்தியக் குடிமக்கள் யார்? வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் யார் என்பதைக் கணக்கிடும் பணி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான வரைவுப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 50 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ஸாம் மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால், அஸ்ஸாமில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 1974-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்தவர் பக்ருதீன் அலி அகமது.

அவருடைய சகோதரர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன், தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதுகுறித்து அவர் கூறுகையில்,``என் குடும்பத்தினரின் பெயர்களைத் தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறுவதற்கான ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1924-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக, இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற ஆவணங்களைச் சமர்பிக்காதவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்களாகக் கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!