வாராக்கடன் தொகை மேலும் உயர்ந்தது!

கடந்த 2017 - 18 நிதியாண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் தொகையானது ரூ.9,61,962 கோடிகளாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் 2017-18ஆம் நிதியாண்டில் உயர்ந்துள்ள நிகர வாராக்கடன் தொகையானது ரூ.1,54,47 கோடியாக உள்ளது. 

வாராக்கடன்

 

மொத்தமுள்ள வாராக்கடன் தொகையில், தொழில் நிறுவனங்களுக்குக் கொடுத்த தொகைதான் அதிகமாகும். தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.7,03,969 கோடி ரூபாய் வாராக்கடனாக உள்ளது. மொத்தத் தொகையில் ரூ.85,344 கோடிகள் மட்டுமே விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடைய பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் தொகையாகும். 

வங்கிகளைப் பொறுத்தவரை, பஞ்சாப் நேஷனல் பேங்க் தான் அதிகபட்சமாக ரூ.86,620 கோடி வாராக்கடனாக வைத்துள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா ரூ.62,328 கோடிகளும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.56,480 கோடிகளும், யூனியன் பேங்க ஆஃப் இந்தியா ரூ.49,370 கோடிகளும், கனரா வங்கி ரூ.47,468 கோடிகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.38,180 கோடிகளும், சென்ட்ரல் பேங்க் ரூ.31,131 கோடிகளாகும். வங்கிகளிலேயே விஜயா பேங்க் தான் குறைந்த அளவாக ரூ.7,526 கோடிகளாகும். பஞ்சாப் & சிந்து பேங்க் ரூ.7,802 கோடிகளை வாடாக்கடனாகக் கொடுத்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!