கர்நாடகாவை இரண்டாகப் பிரிக்க வலுக்கும் கோரிக்கை! - முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் உள்ள வடக்கு மாவட்டங்களான பெல்லகவி, விஜயபுரா, பகல்கோட், பீடார், பெல்லாரி, குல்பர்கா, ஹாவேரி, கோபல் ஆகிய மாவட்டங்களை இணைத்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், தற்போது அந்தக் கோரிக்கை வலுத்துவருகிறது. 

வடக்கு மாவட்டங்கள், அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு முற்றிலும் புறக்கணிக்கப்படுவதால், தனி மாநிலமே தீர்வு என்று கோரிக்கை விடுப்பவர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும், பெல்லகவி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தக் கோரி 30 மடாதிபதிகள் இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், எடியூரப்பா போன்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டர். 

இதைத் தொடர்ந்து, தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை வடக்கு மாவட்டங்களுக்கான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன அம்மாநில எதிர்க்கட்சிகள். தனி மாநில கோரிக்கை வலுப்பதற்கு ஊடகங்களும், பா.ஜ.க-வின் செயலும்தான் காரணம் என முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!