சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி! - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

சுனந்தா புஷ்கர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிதரூர் வெளிநாடு செல்ல, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சசிதரூர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான விசாரணையில் சுனந்தாவின் வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து வந்த முடிவுகளில் அவரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என்று கூறப்பட்டது. இவரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்த நிலையில், சுனந்தாவின் கணவர் சசிதரூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதிலும் சசிதரூர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்த மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சசிதரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் கடந்த ஜூலை 5-ம் தேதி சசிதரூருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 10-ம் தேதிக்குப் பின்னர் சில நாள்கள், வெளிநாடு செல்வதற்கு அனுமதிகோரி சசிதரூர் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதிகள், அவர் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பாக ரூ.2 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!