30 மணி நேரம் நடந்த மீட்புப் பணி -ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு.

பீகாரில், 110 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

ஆழ்துளைக் கிணறு

Photo Credit -ANI 

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள துர்கா மந்திர் பகுதியில் வசித்துவருபவர், நாச்சிகெட் ஷா (Nachiket Sah).இவரின் மூன்று வயது குழந்தை சனா. இவர், தனது சக நண்பர்களுடன் வீட்டின் அருகே நேற்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, பணிகள் முடிவடையாத நிலையில் இருந்த 110 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சனா தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து, உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த படையினர், மீட்டுப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் குழு, மாநில பேரிடர் குழு மற்றும் மருத்துவக் குழுவினரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். 

குழந்தை

Photo Credit -ANI 

சிறுமிக்குத் தேவையான ஆக்ஸிஜன், டியூப்கள் வழியே செலுத்தப்பட்டது. பெற்றோர் அளித்த ஊக்கத்தினால், மன தைரியத்துடன் சிறுமி மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைத்தார். ஆழ்துளைக் கிணற்றின் அருகில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியால் பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து, 30 மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணியை அடுத்து, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர், சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!