செருப்பு தைக்கும் தொழிலாளியின் நேர்மை!- பரிசளித்து மகிழ்ந்த ஆனந்த் மகிந்த்ரா

கிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்தரா சற்று வித்தியாசமானவர். ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற வலைதளங்களில் தனக்கு வரும் தகவல்களைப் படித்துவிட்டு, அப்படியே கடந்து போய்விட மாட்டார். நல்ல விஷயம் என்று கருதினால், உடனே சம்பந்தப்பட்டவரைத்  தேடி போய்விடுவார். சில மாதங்களுக்கு முன், வாட்ஸ்அப்பில் அவருக்கு வந்த புகைப்படத்தைப் பார்த்து, ஆனந்ந் மகிந்த்ரா வியந்தார். புகைப்படத்தில், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர், 'காயமடைந்த காலணிகள் இங்கே குணப்படுத்தப்படும்' இப்படிக்கு  ஷூ டாக்டர் நர்சிராம்'' என்று விளம்பரம் செய்திருந்தார். 

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு ஆனந்த் மகிந்த்ரா பரிசு

செருப்பு தைக்கும் தொழிலாளியின் விளம்பர யுத்தியைக் கண்டு வியந்த ஆனந்த் மகிந்ரா, அவரை தேடிக் கண்டுபிடிக்கத் தன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஹரியானாவில் நர்சிராம் வசிப்பது தெரிந்தது. அவரை கண்டுபிடித்த ஆனந்த் மகிந்த்ரா சகாக்கள் நிதியுதவி அளிப்பதாகக் கூறினர். ஆனால், நேர்மையான அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, நிதியுதவியை ஏற்க மறுத்தார். மாறாக, தனக்கு சிறிய கடை வைத்துத் தருமாறு ஆனந்த் மகிந்த்ராவின் சகாக்களிடம் கூறினார்.  செருப்பு தைக்கும் தொழிலாளியின் நேர்மையான குணத்தைக் கண்டு வியந்த ஆனந்த் மகிந்த்ரா, மும்பை டிசைன் ஸ்டூடியோவில், நர்சிராமுக்கு  என்று பிரத்யேகக் கடைக்கு ஆர்டர் கொடுத்தார். 

மும்பை டிஸைன் ஸ்டூடியோவில், செருப்பு தைக்கும் கடையின் பணிகள் முடிவடைந்துவிட்டன. பல்வேறு வசதிகளுடன் உருவாகியுள்ள கடையின் வீடியோவை ஆனந்த் மகிந்த்ரா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில், இந்த நவீன கடை நர்சி ராமுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. ஆனந்த் மகிந்த்ராவின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!