லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ராஜவாழ்க்கை வாழும் தெருநாய்கள்!

டாடா குழுமத்தின் தலைமையகத்தில் தெருநாய்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன.

'பாம்பே ஹவுஸ்' பெருமைமிகு டாடா நிறுவனத்தின் தலைமையகம். மும்பை நகரில் அமைந்துள்ள பாம்பே ஹவுஸ்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கும் டாடா குழுமத்தின் சர்வதேச தலைமையகமாகச் செயல்பட்டு வருகிறது. 94 ஆண்டுகள் பழைமையான பாரம்பர்யமான இந்தக் கட்டடம் கடந்த 9 மாதங்களாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி, டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையில் கட்டடத்தை மீண்டும் திறந்து வைத்தார். 

பாம்பே ஹவுசில் தெருநாய்கள் ராஜ வாழ்க்கை

கட்டடம் புதுப்பிக்கப்பட்டதோ திறக்கப்பட்டதோ விஷேசம் அல்ல. இந்த முறை கட்டடத்தில் தெருநாய்களுக்கு என்று தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுதான் சிறப்புத் தகவல். நலிவுற்ற தெருநாய்கள், நோய்களால் பீடிக்கப்பட்ட நாய்கள் டாடா குழுமத்தின் தலைமையகத்தில் வந்து தங்கி மீதி நாள்களைக் கழித்துக் கொள்ளலாம். இங்கு நாய்களுக்கு ஷோபா வசதி செய்யப்பட்டுள்ளது. புழுக்கத்திலிருந்து தப்பிக்க மின்விசிறி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தெருநாய்களைக் கவனித்துக்கொள்ள ஷிஃப்ட் முறையில் ஆள்கள் பணிபுரிகிறார்கள். தற்போது, இங்கு தங்கியுள்ள 6 தெரு நாய்கள்  வேளாவேளைக்கு சாப்பிட்டு, குளிரூட்டப்பட்ட அறையில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகின்றன. 

தெருநாய்கள் அடைக்கலம் கொடுத்த பாம்பே ஹவுஸ்

``இந்தியாவில் ஏராளமான கோடீஸ்வரர்கள் இருக்கலாம். ஆனால், ரத்தன் டாடா போல இளகிய மனம் கொண்டவர்களைக் காண்பது அரிது'' என்று ட்விட்டர்வாசிகள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் தோரப்ஜி டாடா 1920-ம் ஆண்டு பாம்பே ஹவுஸ் கட்டடத்தைக் கட்டினார். ஜார்ஜ் விட்டெட் என்ற புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரின் கைவண்ணத்தில் பாம்பே ஹவுஸ் உருவானது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!