``குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி" - அசத்தலான யோசனையில் சிக்கிம் முதல்வர்!

``குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அதற்குத் தகுந்தாற்போல் அரசுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார் சிக்கிம் முதல்வர் பவான் சாம்லிங்.

சிக்கிம் முதல்வர்

சிக்கிம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற முதல்வர் பவான் சாம்லிங், ``தற்போது பல்வேறு தேர்வுகள் மூலம் அரசுப் பணிகள் வழங்கப்படுகிறது. இனி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அதற்குத் தகுந்தாற்போல் அரசுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார். 

சிக்கிம் மாநிலத்தில் தற்போது அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28,000 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ``அரசுப் பணிகளுக்கு, பணியாளர் தேர்வாணையம் மூலம் சீரற்ற முறையில் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார் பவான் சாம்லிங். 

பவான் சாம்லிங் சிக்கிமில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.  இந்தியாவில் அதிக ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துவருபவரும் இவர், இயற்கை முறை வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!