போலி பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி..!

பொறியியல் கல்லூரிகள்


இந்தியாவில் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், நமது நாட்டின் தலைநகரில்தான் அதிக போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன என அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளதுதான். 

நாட்டில் சில பொறியியல் கல்வி நிறுவனங்கள் அரசு அங்கீகாரமின்றி போலியாகச் செயல்படுவதாக அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக, நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங், " கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் 277 போலி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்ததை அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கண்டறிந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில்தான் 66 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அடுத்தபடியாக தெலங்கானாவில் 35 போலி பொறியியல் கல்லூரிகளும் மேற்கு வங்கத்தில் 27 பொறியியல் கல்லூரிகளும், கர்நாடகாவில் 23 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே எடுக்கப்பட்டது. அதனால் நிறையப் பகுதிகள் விட்டுப்போயிருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு போலியான கல்வி நிறுவனங்களைக் கண்டறிவதற்கான வேலைகள் எடுப்போம் என மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார். 

போலி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 

சண்டிகர் - 7, மேற்கு வங்கம்- 27, இமாச்சலபிரதேசம்- 18, தெலங்கானா - 35, உத்தரகாண்ட்- 3, பீகார்- 17, குஜராத்- 8, ஆந்திரப்பிரதேசம் - 7, பஞ்சாப்- 5, ராஜஸ்தான்- 3, தமிழ்நாடு - 11 

பொறியியல் கல்லூரிகள்

பல்கலைக்கழக மானியக் குழு இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது. யூஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே, இவற்றை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தாம். தமிழ்நாட்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 11 கல்லூரிகள் போலியானவை. அதாவது, இவையெல்லாம் முறையான உரிமம் வாங்காமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சட்டவிதிகளின்படி இது மிகவும் தவறான செயல். இக்கல்லூரிகளின் மூலம் கொடுக்கப்படும் பட்டங்கள் செல்லாதவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!