ஒன்றரை வருடமாக ஸ்கூல் பஸ்ஸாகப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்!

சட்டிஸ்கரில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஸ்கூல் பஸ்ஸாக ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்

சட்டிஸ்கர், மனேந்திரகர் பகுதியில் உள்ள ஓர் ஆம்புலன்ஸ் பள்ளி நடக்கும் வேளைகளில் அவசரம் என்றால் உடனடியாக வந்துவிடும். ஆனால், பள்ளி தொடங்கும்போதும் மாலை முடியும் நேரத்திலும் எவ்வளவு அவசரம் என்றாலும் அந்த ஆம்புலன்ஸ் மட்டும் வராது. ஏனென்றால் அது காலை, மாலை ஆகிய வேளைகளில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஸ்கூல் பஸ்ஸாக செயல்பட்டு வருகிறது. 

சட்டிஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளது மனேந்திரகர் என்ற ஊர். இங்கு ஒரு ஆம்புலன்ஸ் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து அந்த ஓட்டுநர் கூறும்போது, ``இதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் மருத்துவ உயரதிகாரிதான் இவ்வாறு செய்யச் சொன்னார். கடந்த ஒன்றரை வருடமாக இதேபோன்று, ஆம்புலன்ஸில்தான் குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். 5 மாதங்களுக்கு முன்னர் பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கப்பட்டும் அது இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!