`இந்தியாவின் மிகப்பெரிய தலைமை நிர்வாகிகள் இவர்கள்தான்!'- ஐஸ்வர்யா ராய் பளீச்

இல்லத்தரசிகள்தான் ``இந்தியாவின் மிகப்பெரிய தலைமை நிர்வாக அதிகாரிகள்'' என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

ஐஸ்வர்யா

திருமணத்துக்கு பிறகும் பாலிவுட்டில் பிசியாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஃபன்னி கான் (Fanney Khan). வரும் 8-ம் தேதியில் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக, தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் Indian Idol 10 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், `இல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய தலைமை நிர்வாக அதிகாரிகள். அவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்க வேண்டும். பாராட்டுகளுக்கு உரியவர்களும் அவர்கள்தான். நம்நாடு உட்பட உலகில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் முழு மரியாதையுடன் நான் தலைவணங்குகிறேன்' என்று பேசினார். 

இதனிடையில் பேசிய நிகழ்ச்சியின் நடுவர் விஷால் தட்லானி (Vishal Dadlani), `ஒருமுறை, அமிதாப் பச்சன் ஜி, இரவு விருந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொண்டேன். அப்போது, ஐஸ்வர்யா ராய் மிகுந்த மரியாதையுடன் எங்களுக்கு உணவு பரிமாறினார். அந்தத் தருணத்தில், உலகப் புகழ்பெற்ற நடிகை என்ற அடையாளம் அவரிடம் சிறிதளவும் தென்படவில்லை. சிறந்த இல்லத்தரசியாகச் செயல்பட்டார்' என்று பாராட்டினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!