எம்.எஸ்.எம்.இ.களுக்கு ஜி.எஸ்.டி. கேஷ்பேக் சலுகை!

கிராமங்களில் பெருமளவு பழக்கத்தில் இருக்கும் பிம் ஆப் (BHIM UPI) மற்றும் ரூபே ஆப் (Rupay) போன்றவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா தலைமையில், டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா மற்றும் கேரள, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களை உள்ளடக்கி இருக்கும்.

ஜி.எஸ்.டி.


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்துபவர்களுக்கு 20% திருப்பித் தரப்படும் என பியூஷ் கோயல்  கூறினார். மேலும் கிராமங்களில் பெருமளவு பழக்கத்தில் இருக்கும் பீம் ஆப் (BHIM UPI) மற்றும் ரூபே ஆப் (Rupay) போன்றவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை சோதனை முயற்சியாக செய்துபார்க்கத் தீர்மானிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!