வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/08/2018)

கடைசி தொடர்பு:07:30 (05/08/2018)

ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் சர்ச்சையில் புதுக்குழப்பங்கள்!

ஆண்ட்ராய்டு போன்களில் பயனாளர்களின் அனுமதியில்லாமல் ஆதார் ஆணையத்தின் ஹெல்ப்லைன் எண் மற்றும் அவசர உதவிக்கான 112  எண் ஆகிய இரண்டும் பதியப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது அனைவரும் அறிந்ததே. அவ்விரு எண்களையும் 'கவனக்குறைவு" காரணமாக இத்தவறு நேர்ந்ததென்று கூகுள் நிறுவனம் பழியை ஏற்றுக்கொண்டது. எனினும் அந்த சர்ச்சை ஓயாமல் தொடர்கிறது.

கூகுள்


இந்த எண்களை மொபைல் போன்களின் கான்டக்ட் லிஸ்டில் 2014ஆம் ஆண்டில் தான் இணைத்தோமென்று கூகுள் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 112 என்ற அவசர உதவி எண்ணானது 2015ஆம் ஆண்டில்தான் அறிமுகமானதென்று டிராய் தெரிவிக்கிறது. அப்படியானால் 2014ஆம் ஆண்டிலேயே எப்படி இந்த எண் புழக்கத்திற்கு வந்தது என்ற கேள்வி எழுகிறது. இதில் எழுப்பப்படும் இன்னொரு கேள்வியானது காங்கிரஸ் கட்சியை நோக்கி இருக்கிறது. அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பாக, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும்  1800-300-1947 என்றழைக்கப்படும் கட்டணமில்லா எண்ணை தங்களது மொபைலில் இணைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டதோடு. அது ஆதார் ஆணையத்தின் தொடர்பு எண்ணாகத்தான் அறிமுகமானது என்று இன்னொரு குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. ஆக, காங்கிரஸ் அரசுதான் இந்த குழப்பத்திற்கு காரனமென்று புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து தீர விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரக்கூடும்.