வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (05/08/2018)

கடைசி தொடர்பு:09:30 (05/08/2018)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கேரளா வருகை!

கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை திருவனந்தபுரம் வருகிறார்.

ராம்நாத் கோவிந்த்

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை 6.45 மணிக்கு  தனி ராணுவ விமானத்தில் திருவனந்தபுரம் வருகிறார். கேரள ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார். பின்னர் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் உணவு அருந்துவது. திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரி விழா மற்றும் குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். செவ்வாய் கிழமை மதியம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கேரள மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.