டெல்லியை அதிரவைக்கும் வாகனத் திருட்டு

டெல்லியில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களே பெரும்பாலும் திருடப்படுவதாகக் காவல்துறையின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி

டெல்லியில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களே பெரும்பாலும் திருடப்படுவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ``திருடப்படும்  வாகனங்களில் 55 சதவிகிதம் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களே. 1 சதவிகிதம் மட்டுமே அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 44 சதவிகித வாகனங்கள் இரவு 9 முதல் காலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் திருடப்படுவதாகவும் மேலும், 16 சதவிகித வாகனத் திருட்டு மாலை 6 முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் 30-ம் தேதி வரையில் 21,298 வாகனத் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 12,689 வாகனங்கள் அந்தக்கால இடைவெளியில் திருடப்பட்டுள்ளன. இதில் 3,871 கார்களும் 3,237 ஸ்கூட்டர்களும் திருடப்பட்டுள்ளன” என அந்த அறிக்கை கூறுகிறது.

முறையான வாகன நிறுத்தம் இல்லாததே இந்தத் திருட்டுகளுக்கு காரணம். மேலும், நிறைய குடியிருப்புகளில் காவலாளிகள் இருப்பதில்லை. இரவு நேரத்தில் குறைவான காவலாளிகளே உள்ளனர். இதனால், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!