`ஒரே அறையில் 18 மாடுகள் அடைப்பு...!' - கால்நடைகளுக்கு நிகழ்ந்த அவலம்

சட்டீஸ்கர் மாநிலம் பலோடபசர் மாவட்டத்தில் உள்ள ரோஹாசி என்ற கிராமத்தில், மாடுகளை ஒரே அறையில் அடைத்து வைத்திருக்கின்றனர் கிராம மக்கள். இதனால், 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து கிராம மக்கள் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. 

மாடுகள்

சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தில் குவியல் குவியலாக மாடுகளின் சடலங்கள் புதைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியது. அதையடுத்து, விசாரணையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜனக் பிரசாத் திடுக்கிடும் பல தகவலை தெரிவித்துள்ளார். `ரோஹாசி கிராமத்தில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகிறது. பெரும்பாலான கால்நடைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் வைத்து முறையாகப் பராமரிக்க முடியாத சூழ்நிலையால், யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை. இதனால், அவை விலை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. 

இதைக் கட்டுப்படுத்த பஞ்சாயத்தைக் கூட்டிய கிராம மக்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். கிராமத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். இதனால், 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இறந்த மாடுகளை உடல்கூறு ஆய்வு செய்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!