`என் மனைவிக்கு உதவுங்கள்'- ஹைதராபாத்தை பதறவைத்த ஜெயில் வார்டனின் தற்கொலைக் கடிதம்!

ஹைதராபாத்தில் ஜெயில் வார்டன் ஒருவர் தற்கொலைக் கடிதம் மற்றும் வீடியோவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஜெயில்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செர்லாபள்ளி சிறையில் வார்டனாக இருப்பவர் ஸ்ரீனிவாஸ். இவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி கடிதம் மற்றும் வீடியோவை தன் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில்  ``என்னுடைய தற்கொலைக்கு காரணம் சிறைக் கண்காணிப்பாளர்தான் காரணம். அவர் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். அவர் என் மீது கூறும் புகார்கள் அனைத்தும் போலியானவை. அவர் என்னைக் குற்றவாளியாகப் பார்க்கிறார்” என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவ முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்ரீநிவாஸைக் காணவில்லை. மாயமான ஸ்ரீனிவாஸை மீட்டுத்தரக் கோரி அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். காவலர் ஒருவர் தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!