நிரவ் மோடியிடம் ஏமாந்த வங்கி, வாடிக்கையாளர்களிடம் வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா?

மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.

மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் வங்கிகள் வசூல்

நாட்டின் 21 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மினிமம் பேலன்ஸ் வைக்காத 30.8 கோடி வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளன. 2017-ம் ஆண்டு முதல் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியும் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்தது. ரூ.6,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கும் எஸ்.பி.ஐ வங்கிதான் மினிமம் பேலன்ஸ் வைத்தாத வாடிக்கையாளர்களிடம் ரூ.2,433 கோடி அபராதமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை மட்டும் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1,700 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது. 

எஸ்.பி.ஐ. வங்கியில் மினிமம் பேலன்ஸ் நகர்ப்புறங்கனில் ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2,999 முதல் ரூ.1,500 வரை பேலன்ஸ் குறைந்தால் ரூ.30 அபராதம் விதிக்கப்படும். ரூ.1,499 முதல் ரூ. 750 வரை என்றால் ரூ.40 அபராதம். ரூ.750-க்கும் கீழே குறைந்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

ஹெச்.டி.எப்.சி வங்கி அபராதமாக ரூ.590.84 கோடி வசூலித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வங்கி 619.39 கோடி வசூலித்திருந்தது. ஆக்ஸிஸ் வங்கி ரூ 530.12 கோடியும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.317.6 கோடியும் வசூலித்துள்ளன. நிரவ் மோடியிடம் ஏமாந்த பஞ்சாப் நேஷனல் வங்கியியில் நகர்ப்புறத்தில் ரூ.1,000, கிராமப்புறத்தில் ரூ.500 மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும். இந்த வங்கி அபராதமாக ரூ.211 கோடி வசூலித்துள்ளது. 

2017-18-ம் நிதியாண்டின் நிலவரம் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்றவர்களைத் தப்ப விடும் வங்கிகள் அப்பாவிகள் பணத்தை அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!