வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (06/08/2018)

கடைசி தொடர்பு:14:43 (06/08/2018)

சுக்மாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்டர்! 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   

நக்சலைட்டுகள்

சத்தீஸ்கரில் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று என்கவுன்டர் நடத்தினர். தலைநகர் ராய்பூரில் இருந்து 390 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட சுக்மா கோண்டா மற்றும் கோலபள்ளி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மாவட்ட காவல் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அடர்ந்த காடுகள் சூழ்ந்த பகுதியான கோலபள்ளியில் நடந்த மோதலால் அப்பகுதி முழுவதும் குண்டுச் சத்தம் எதிரொலித்தது.

இந்தத் தாக்குதலில், 14 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 16 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சி.ஆர்.பி.எஃப் படையினர் தாக்குதல் நடந்த இடத்தில் தேடுதல் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. என்கவுன்டர் தொடர்பான முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.