சந்தை தொடர்ந்து முன்னிலை! 06-08-2018

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இன்று, பொதுவாக ஒரு மந்தமான நிலைமையே காணப்பட்டாலும், இந்திய பங்குச் சந்தையில் பல முக்கியப் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதனால், சென்செக்ஸும், நிஃப்டியும் மற்றுமொரு புதிய உச்சம் தொட்டன.

மும்பைச் சந்தையின் சென்செக்ஸ் 37,805.25 ஒரு உயரத்தைத் தொட்டபின், 135.73 புள்ளிகள். அதாவது, 0.36 சதவிகித லாபத்துடன் 37.691.89 என முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11,327.65 என்று உயர்ந்து, இறுதியில் 26.30 புள்ளிகள். அதாவது, 0.23 சதவிகித லாபத்துடன் 11,387.10-ல் முடிந்தது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் பூசல்குறித்த கவலையால், ஆசிய சந்தைகள் ஒரு கலப்படமான நிலையில் ஸ்திரமற்று முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகளும் தொய்வுற்ற நிலையில் பயணித்தன.

இந்திய சந்தையைப் பொறுத்தவரை, கடந்த வெள்ளிக்கிழமை கண்டதுபோலவே, ஷார்ட் கவரிங் மற்றும் பார்கைன் ஹண்டிங் காரணமாக பல பங்குகள் விலை உயர்ந்தன.

டெலிகாம், வங்கி மற்றும் உலோகத் துறை பங்குகள் முன்னேற்றம் கண்டன. 

சந்தையில், இன்று முதல் முறையாக வணிகத்துக்கு வந்த எச்.டி.எஃப்.சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனப் பங்குகள் சிறப்பாக வர்த்தகம் ஆகி, ஐ.பி.ஓ விலையிலிருந்து  65 சதவிகிதம் உயர்ந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஆக்ஸிஸ் பேங்க் 3.9%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 3.4%
ஸ்டேட் பேங்க் 3.3%
பார்தி ஏர்டெல் 3.1%
யு.பி.எல் 2.4%
ஹிண்டால்கோ 2.1%
ஹீரோ மோட்டோகார்ப் 1.7%
இண்டிகோ 6.7%
ஐ.டி.எஃப்.சி 6.4%
ஐ.ஆர்.பி. 5%
வக்ராங்கி 5%
ஆதித்யா பிர்லா ஃபாஷன்ஸ் 4.9%
ரிலையன்ஸ் கேப்பிட்டல் 4.7%
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 4.6%

விலை சரிந்த பங்குகள் :

கெயில் இந்தியா 3%
கோட்டக் பேங்க் 1.7%
டைட்டன் 1.7%
டாக்டர் ரெட்டி'ஸ் 1.7%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.65%
லூப்பின் 1.6%
சன் பார்மா 1.6%
டாடா மோட்டார்ஸ் 1.6%

இன்று மும்பை பங்குச் சந்தையில், 1599 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1124 பங்குகள் விலை சரிந்தும், 198 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!