ஜுஹு கடற்கரையில் ஜெல்லி மீன்கள்! அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்

மும்பை, ஜுஹு கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. இதனால், அங்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். 

ஜெல்லி மீன்கள்

கடலில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில் ஜெல்லி மீன்கள் கடல்களில் இரண்டாயிரத்துக்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றன. இதில், பெரும்பாலானவை கொடிய விஷத் தன்மை கொண்டவையாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மனிதனைக் கொல்லக்கூடிய ஜெல்லி மீன் வகைகளும் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடலின் ஆழமான உள்பகுதியில் வாழும் ஜெல்லி மீன்களானது கடற்கரை ஓரங்களில் அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன. இதேபோல், மும்பை கடற்கரையிலும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. 

நீல பாட்டில் ஜெல்லி மீன் (blue bottle jellyfish) என்ற வகை ஜெல்லி மீன்கள்தான் மும்பை ஜுஹு கடற்கரையில் முகாமிட்டுள்ளன. இவ்வகை ஜெல்லி மீன்களை, Portuguese man-of-war என்று கூறப்படுகிறது. நீண்ட வால்களைக் கொண்ட இவ்வகை மீன்கள் hydrozoan குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மீன்வகைகள் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல்களில் காணப்படுகின்றன. 

ஜெல்லி மீன்கள்

மும்பைக் கடற்கரையில் தற்போது அதிகளவில் நீல பாட்டில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. அட்டைப்பூச்சி போல் உடலில் படும் இந்த ஜெல்லி மீன்களால், ஒரு மணிநேரத்தும் மேலாக நமைச்சல் மற்றும் வலியை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. தற்போது வரையில், 150 பேர் ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜுஹு கடற்கரைக்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீல பாட்டில் ஜெல்லி மீன்களின் விஷம், கடலில் வாழும் மீன்களை மட்டுமே கொல்லக்கூடியது என்றும் மனிதர்களைக் கொல்லும் தன்மை இதற்கு இல்லை எனக் கூறுகின்றனர் சூழல் ஆய்வாளர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!