வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/08/2018)

கடைசி தொடர்பு:14:00 (07/08/2018)

பணத்துக்காக என்கவுன்டரில் ஈடுபடும் உ.பி. போலீஸ்! ஸ்டிங் ஆபரேஷன் தந்த அதிர்ச்சி

த்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, 1,500 என்கவுன்டர்கள் இதுவரை நடந்துள்ளன. அதில், 62 பேர் உயிரிழந்துள்ளனர். 480 பேர் காயமடைந்துள்ளனர். பிரபல ஆங்கிலச் சேனல் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் போலி என்கவுன்டர்கள் நடப்பதாக ஸ்டிங் ஆபரேஷன் வழியாக அம்பலப்படுத்தியுள்ளது. பணத்துக்காகவும் பப்ளிசிட்டிக்காவும் புதவி உயர்வுக்காகவும் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக்ரா மண்டலத்தில் மட்டும் 241 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. சித்ரா ஹத் போலீஸ் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் ஷர்வேஷ் குமார் பிசினஸ்மேன் ஒருவரை என்கவுன்டர் செய்ய ரூ.8,00,000  வரை பேரம் பேசி ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியுள்ளார். 

போலி என்கவுன்டர் செய்யும் உ.பி. போலீஸ்

சப் - இன்ஸ்பெக்டர் ஷர்வேஷ்குமார் என்ற இன்ஸ்பெக்டரிடம் பிசினஸ்மேன் போல செய்தியாளர்கள் இருவர் ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர்.  போட்டியாளர் பிசினஸ்மேனை கொல்ல ஷர்வேஷ்குமாரே ஐடியா கொடுக்கிறார். ``எனது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3, 4 வங்கிகள் இருக்கின்றன. ஏதாவது கொள்ளைச் சம்பவம் நடந்தால் அந்தப் பிசினஸ்மேனை வழக்கில் சேர்த்து விடுவதாகவும் ஏதாவது ஒரு ஐடி கார்டு அவரிடம் இருக்கும். அதைக் கைப்பற்றி கொள்ளை நடந்த வங்கியில் போட்டு ஆதாரமாக சேர்த்துவிட முடியும்'' எனச் செய்தியாளர்களிடம் கூறுகிறார் ஷர்வேஷ்குமார். 

அதேபோல் பஸாய் ஜாங்கர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்  ஜக்தாம்பா சிங், பப்ளிசிட்டி, பதவி உயர்வுக்காக உ.பி போலீஸார் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதே ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங்கும் போலி என்கவுன்டரில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஸ்டிங் ஆபரேஷனில் கூறி சிக்கியிருக்கிறார்.  இந்தச் செய்தி வெளியிட்டவுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் ஓம் பிரகாஷ் சிங்,  3 போலீஸ் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்டு செய்துள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

என்கவுன்டர்

``முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்களும் ரவுடிகளும் கொள்ளையர்களும் என்கவுன்டர் செய்யப்படுவதாக கூறுகிறார். உண்மையான ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்குமே'' என்று சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க