வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (08/08/2018)

கடைசி தொடர்பு:12:14 (08/08/2018)

நாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி! - இரங்கல் குறிப்புடன் இரு அவைகளும் ஒத்திவைப்பு #Karunanidhi

கருணாநிதியின் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இரங்கள் குறிப்பு

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6:10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் மறைவையொட்டி, இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.