வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (08/08/2018)

கடைசி தொடர்பு:14:41 (08/08/2018)

`இந்த ராஜதந்திரியை இனி நாடு பார்க்கமுடியாது' - கருணாநிதிக்கு சோனியா புகழாரம்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6.10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதியின் மறைவையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கருணாநிதியின் இறப்புச் செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி இந்த நாடு பார்க்கமுடியாது. தனது வாழ்வை சமூக நீதிக்காக அர்ப்பணித்தவர். ஒடுக்கப்பட்டோர், ஏழை எளியோர் நலனுக்காகப் பாடுபட்டவர். அவர் எனக்குத் தந்தை போன்றவர், அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. என் மீது அவர் காட்டிய கனிவையும், பரிவையும் என்றும் மறக்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.