பெண்களுக்கான அடுத்த அங்கீகாரம் - இந்திய வரலாற்றில் முதல்முறையாகப் பெண்கள் ஸ்வாட் குழு

இந்திய வரலாற்றில் முதல் முறையாகச் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்பிரிவில் 36 பெண் காவலர்கள் இணைக்கப்பட உள்ளனர். 

ஸ்வாட் குழு

தற்போதுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்துவருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெண்கள் கால்பதிக்காத துறைகளே கிடையாது என்ற அளவுக்கு அவர்களின் வளர்ச்சி உள்ளது. இந்நிலையில் பெண்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாகச் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்பிரிவில் (SWAT) பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 

அஸ்ஸம் மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர், அருணாசலப்பிரதேசம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஐந்து பெண்கள்,மேகாலயா 4, நாகாலாந்து 2, மிசோரம் 1 பெண் என மொத்தம் 36 பெண்களை இணைத்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 

இந்தப் பெண்கள் படைப்பிரிவின் அறிமுக விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார், அப்போது பேசிய அவர் , “இந்தியாவில் முதல்முறையாகப் பெண்கள் ஸ்வாட் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வரும் சுதந்திர தினத்தன்று முதல் இவர்களின் பணி தொடங்க உள்ளது. முன்னதாக இந்த 36 பெண்களும் தேசிய பாதுகாப்புப் படை பிரிவில் சேர்ந்து 15 மாதங்கள் பயிற்சி பெற்ற பின்னரே, இந்தப் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!