கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு | Kerala Chief Minister visits flood affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (11/08/2018)

கடைசி தொடர்பு:11:03 (11/08/2018)

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 50,000-த்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். 

பினராயி விஜயன்

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் சட்டர்களும் திறந்துவிடப்பட்டுள்ளன. அதன் விளைவாக அணைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர், மேலும் பல பகுதிகளை சூழ்ந்துகொண்டுள்ளன. இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று நேரில் ஆய்வு செய்துவருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரளா

அவருடன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், மாநிலக் காவல்துறை தலைவர் லோக்நாத பெஹ்ரா ஆகியோர் உள்ளனர். மத்திய அரசிடமிருந்து உதவி கோரியுள்ள கேரள அரசுக்குத் தற்போது ராணுவ உதவிகள் வந்து சேர்ந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் செல்ல முடியாத பல இடங்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் சென்று மக்களை மீட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close