`ஐகியா' விற்பனையகத்தால் ஸ்தம்பித்த ஹைதராபாத் - வைரலாகும் புகைப்படங்கள்! | opening of Swedish home furnishing brand IKEA in Hyderabad creates traffic block

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/08/2018)

கடைசி தொடர்பு:11:12 (12/08/2018)

`ஐகியா' விற்பனையகத்தால் ஸ்தம்பித்த ஹைதராபாத் - வைரலாகும் புகைப்படங்கள்!

ஐகியா விற்பனையகம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட முதல்நாளே 40,000-த்துக்கும் அதிகமானோர் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெரிசல்

`ஐகியா' ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த வீட்டு உபயோகப் பொருள்களுக்கான புகழ் பெற்ற விற்பனையகம். இந்த ஐகியா விற்பனையகம் ஹதராபாத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.  ஸ்வீடன் நாட்டில் புகழ்பெற்று விளங்கும் இந்த விற்பனையகம், தனது முதல் கிளையை இந்தியாவில் முதன்முறையாக, ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. 4 லட்சம் சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பிரதான பகுதியான ஹைடெக் சிட்டியில் ஐகியா அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகம் திறக்கப்படுவதாக வந்த அறிவிப்பையடுத்து, ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு குவிந்தனர். ஏறக்குறைய 40,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், ஹைடெக் சிட்டியைச் சுற்றி கடுமையாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல ஐகியா விற்பனையகத்திலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறினர். போக்குவரத்து நெரிசாலால் ஸ்தமித்த ஹதராபாத் சிட்டியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதே போல ஐகியா விற்பனையகக் கட்டடத்துக்குள் குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டமும் தொடர்பான வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.