`ஐஐடி மாணவர்களின் சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது' - பிரதமர் மோடி!

ஐஐடி மாணவர்களின் சாதனைகளை கண்டு நாடு பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று மும்பை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை அளித்தார். பின்னர் பேசிய அவர், ``இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியில்  ஐஐடிக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 21ம் நூற்றாண்டின் மந்திர சொல் கண்டுபிடிப்பு. கண்டுபிடிப்பு இல்லாத சமூகம் முன்னற்றம் அடையாது. ஆனால் ஐஐடி மாணவர்களின் சாதனைகளை கண்டு நாடு பெருமை கொள்கிறது. உலக அளவில் இந்திய பொருட்களை, கண்டுபிடிப்புகளை பிரபலப்படுத்துவதில் ஐஐடிக்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இது போதாது.

புவி வெப்பமடைதல், வேளாண்துறை உற்பத்தி, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற துறைகளில் நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் புதிய சிந்தனைகளை கொண்டு பாடுபட வேண்டும். உலக அளவில் தொழில் தொடங்குவதற்காக கேந்திரமாக இந்தியா உள்ளது. தொழிற்சாலை வளர்ச்சியில் நாடு மேலும் மேம்பட வேண்டும். அதற்கு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இதனை அரசு மட்டும் நிகழ்த்திவிட முடியாது. மாணவர்கள் ஆகிய உங்களால் இதனை நிகழ்த்தி காட்டிட முடியும். மும்பை தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் உழைத்திட வேண்டும். ஐஐடி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளேன்" என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!