வெளியிடப்பட்ட நேரம்: 02:41 (12/08/2018)

கடைசி தொடர்பு:02:41 (12/08/2018)

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் வாஜ்பாய்..! நேரில் சந்தித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

வாஜ்பாய்

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில், நேற்று மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஏற்கெனவே, பிரதமர் மோடி ஒரு மாதத்துக்கு முன்னர் வாஜ்பாயை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்திருந்தார்.