கேரள கப்பல் விபத்தில் இறந்த மீனவரின் உடல் வலையில் சிக்கியது!

கேரளாவில் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த விசை படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவர்கள் 9 பேரில் ஒருவரின் உடல் நேற்றிரவு குமரி மாவட்ட மீனவர் வலையில் சிக்கியது.

கேரளாவில் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த விசைப் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவர்கள் 9 பேரில் ஒருவரின் உடல் நேற்றிரவு குமரி மாவட்ட மீனவர் வலையில் சிக்கியது.

கப்பல் மோதி படகு விபத்து

கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி இரவு மீன் பிடிக்கச்சென்ற ஓசியானிக் என்ற விசைப்படகு மீது 7-ம் தேதி அதிகாலை 3 மணிக்குக் கப்பல் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 9 மீனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் மீனவர்களும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் ஈடுபட்டனர். மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த  செயின்ட் அந்தோணி என்ற விசைப்படகின் வலையில் நேற்று இரவு ஒரு சடலம் சிக்கியது. அது கேரளத்தைச் சேர்ந்த சிஜூ என்ற மீனவரின் உடல் என அடையாளம் காணப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் இருந்து, 50 கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட சிஜூ-வின் உடல் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!