ஷ்ரேயா கோஷல் பாடி வெளியான வைல்டு ஆந்தம்..! | Wild anthem sung by Shreya Ghoshal and other singers

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (13/08/2018)

கடைசி தொடர்பு:19:30 (13/08/2018)

ஷ்ரேயா கோஷல் பாடி வெளியான வைல்டு ஆந்தம்..!

ஷ்ரேயா கோஷல் பாடி வெளியான வைல்டு ஆந்தம்..!

உலகின் 2.4 சதவிகித நிலப்பரப்பை மட்டுமே கொண்டிருப்பினும் 7-8 சதவிகித உலக உயிரினங்களின் வீடாக இருந்து வருகிறது நம் இந்திய நாடு. ஆனால், நகரமயமாக்குதல், தொழில்மயமாக்குதல் எனக் கடந்த சில வருடங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன இந்த உயிரினங்கள். ஏற்கெனவே பல விலங்குகள் மிகவும் குறைந்த அளவில் காணப்பட்டு ஆபத்தான நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதைப் பெரிய பொருட்டாகவே எவரும் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையில் பாலிவுட் பிரபலமும் சுற்றுசூழல் ஆர்வலருமான தியா மிர்சா ஞாயிற்றுக்கிழமை `மேரே தேஷ் கி சமீன்’ என்ற இந்திய வனகீதப் பாடலை (Wild Anthem ) யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். இந்த இந்திப் பாடலை பிரபல பாடகர்களான ஷ்ரேயா கோஷல், பென்னி தயால், சுனிதி சாவ்கான், விஷால் தத்லானி, கிளின்டன் செரிஜோ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இது இந்தியாவில் இருக்கும் பல்வகைப்பட்ட உயிர்களைக் கொண்டாடும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி பேசுகையில், "இந்தியாவுக்கென ஒரு வைல்டு ஆந்தம் வெளியிட வேண்டும் என்பது என் பல நாள் கனவாக இருந்து வந்தது. அந்தக் கனவை நிஜமாக்கிய இந்தப் பாடல் நமது இந்திய நிலப்பரப்புகளின் வியக்கத்தக்க பல்வகைப்பட்ட உயிர்களைக் கொண்டாடும் ஒரு பாடலாக அமையும்" என ஐக்கிய நாடுகளின் (UN) சுற்றுச்சூழல் நல்லிணக்கத் தூதுவராகவும் இருக்கும் நடிகை தியா மிர்சா கூறியிருக்கிறார்.

ஷ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷல், "இத்தனை அழகான, வியக்கவைக்கும் உயிர்களைக் கொண்ட இந்த நாட்டில் பிறந்ததுக்கே நாம் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்த உயிர்கள் அனைத்தும் இயற்கை நமக்கு அளித்த அதிசயப் பொக்கிஷங்கள். இதை நம்மால் எந்த அளவு முடிகிறதோ அந்த அளவு பாதுகாக்க முற்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

 

 

 

நம் நாட்டின் பல்வேறு விலங்கினங்களை அழகாகத் தொகுத்து காட்சிப்படுத்தியுள்ள இந்தப் பாடலைப் பாடியதோடு இசையும் அமைத்துள்ளார் பாடகர் கிளின்டன் செரிஜோ. இதைத் தியா மிர்சா மற்றும் அவரின் கணவர் சாஹில் சங்காவுடன் இணைந்து இந்தியாவின் வனவிலங்குகள் அறக்கட்டளையும் தயாரித்துள்ளது. இப்பாடல் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க