ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி! - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட்  ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மனு

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பசுமைத்தீர்ப்பாயம், தமிழக அரசின் ஆணையில் தலையிட முடியாது. ஆனால், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ளலாம் என ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. இது தொடர்பாக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் எதிரொலியாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு தேசிய பசுமைத்தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!