ஜே.என்.யு மாணவர்மீது துப்பாக்கிச் சூடு... மெகபூபா முப்தி கடும் கண்டனம்! | JNU leader Umar Khalid shot at inside New Delhi's Constitution Club

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/08/2018)

கடைசி தொடர்பு:07:52 (14/08/2018)

ஜே.என்.யு மாணவர்மீது துப்பாக்கிச் சூடு... மெகபூபா முப்தி கடும் கண்டனம்!

புதுடெல்லியில், `வெறுப்பு உணர்வுகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற நிகழ்ச்சி `டெல்லி அரசியல் சாசன சபை’யில் நேற்று (ஆகஸ்ட் 13-ம்தேதி) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கோரக்பூர் முன்னாள் மருத்துவர் கபீல்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் நடந்துகொண்டிக்கும்போது, கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் மாணவர் உமர் காலித்தை நோக்கிச் சுட்டார். இந்தத் தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டார். 

ஜே.என்.பல்கலைக்கழக மாணவர்மீது நடந்த தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``சுதந்திரதின விழா கொண்டாடுவதற்கு முந்தைய நாளில், உமர் காலித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.  உயர் பாதுகாப்பு வளையம் உள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது பலரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.