மோடி உரையை நாளை யூடியூபில் காணலாம்! - முதல்முறையாக சுதந்திர தினவிழா நேரலை

நாளை நடக்க உள்ள சுதந்திரதின விழாவை முதல்முறையாக சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

மோடி

இந்தியாவின் 71-வது சுதந்திரதினம்,  நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, சுதந்திர தின விழாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கலாம் எனத் தகவல் வெளியானதை அடுத்து, டெல்லி செங்கோட்டை, காஷ்மீர் எல்லை, நாட்டின் முக்கிய இடங்கள் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுதந்திரதின விழா சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. பிரசார் பாரதி என்ற அரசு தொலைத்தொடர்பு நிறுவனம், கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து இந்த நேரலையைச் செயல்படுத்த உள்ளன. நாளை, பிரதமர் மோடி பேசும் சுதந்திரதின உரையைப் பலர் கேட்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவருக்கும் எளிதாக இதை கொண்டுசேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரலையை யூடியூப் மற்றும் கூகுளில் காணலாம். வழக்கமாக 1.5 முதல் 2 மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில்  பார்ப்பார்கள். ஆனால், தற்போதுள்ள சமூக வலைதளத்தின்மூலம் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தமுடியும் என்றும், அதனால் பிரசார் பாரதியின் டிஜிட்டல் தளம் வளரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின்போதுதான், முதல் முறையாக இதுபோன்ற நேரலையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!