`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது!’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை

ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமான தினம் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாடு முழுவதும் 72 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நாளை டெல்லியில் பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றுகிறார். இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ராம்நாத் கோவிந்த் பேசுகையில்,`ஒவ்வோர் இந்தியருக்கும் ஆகஸ்ட் 15 புனிதமான நாள். இந்த நேரத்தில் நாம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களை நினைவுகூர்கிறேன். நாட்டின் பெண்கள் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஏழைகள் வறுமையிலிருந்து விடுபடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது சமூகத்தில் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள், அவர்கள், தங்களது பாதையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!