வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (15/08/2018)

கடைசி தொடர்பு:06:43 (15/08/2018)

யூ-டியூப்பில் சாதனைப் படைத்த தேசிய கீதம்!

வீன தொழில்நுட்பங்கள் அதிகமாகிவிட்ட யுகத்தில் இப்போது இளைஞர்களை அதிகமாக ஈர்த்திருப்பது சோஷியல் மீடியாக்கள்தான். பெரும்பாலான நேரங்களை அவர்கள் இங்கேதான் செலவிடுகின்றனர். அந்தவகையில் பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர். குறிப்பாக யூ-டியூப்பில் இப்போது எந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது.. எந்த வீடியோவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடையே அதிகமாக உள்ளது. ஆகவே, இத்தகைய இளைய தலைமுறையினரை கவர்வதற்காகவே தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட ஒரு இசை ஆல்பமானது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது!

தேசிய கீதம்

 

மும்பையைச் சேர்ந்தவர் பர்ஹத் விஜய் அரோரா. இவருடைய இயக்கத்தில் பியானோ இசைக் கலைஞர் ஷயன் இடாலியா என்பவர் தேசிய கீதம் பாடலை பியானோவில் வாசித்துள்ளார். அந்த இசையானது பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது. `ஜன கண மன..’ எனத்தொடங்கும் அந்த இசையின் வீடியோ பதிவை சுமார் 72 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 

``இந்த வீடியோவை பதிவேற்றிய முதல் நாளிலேயே சுமார் 50 லட்சம் பேர் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான பேர் இதைப் பார்த்து, தங்களுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தேசிய கீதம் என்ற பெருமையை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி” என்று கூறியிருக்கிறார் ஷயன் இடாலியா.

இன்று, 72-வது சுதந்திர தினம். இதையொட்டி வெளியிடப்பட்ட வீடியோ சாதனைப் படைத்திருப்பது அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை!