தியாகிகள், வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சுதந்தர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் 72-வது சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழகத்திலும் சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலர் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

விழாவில் உரையாற்றிய முதல்வர், `நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கேற்றவர்கள் தமிழர்கள்தான். சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில், தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13,000 இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். தியாகிகளின் வாரிசுதாரர்களின் ஓய்வூதியம் ரூ.6,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படும். தியாகிகளின் சிறப்பு வாரிசுதாரர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டும்' என்று அறிவித்தார்.

ஓய்வூதியம் - சுதந்திர தினம்

மேலும், `விளையாட்டில் சாதனை படைத்த தகுதிவாய்ந்த வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். இதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்படும். குழுவின் வழிகாட்டுதல்படி வீரர்களுக்கு அரசுப் பணி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு அரசு அல்லது அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் வீரர்களுக்குப் பணிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில், பிரதம மந்திரி வீடுவசதி திட்டம் மற்றும் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!