தேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம்! கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo

பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடி ஏற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

நாட்டின் 72-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியினை ஏற்றினார். தேசியக் கொடியை அமித் ஷா ஏற்றும்போது எதிர்பாராமல் கொடி கீழே இறங்கிவிட்டது. அதன் பின்னர், சுதாரித்துக்கொண்ட அவர், கொடியை வேகமாக மேலே ஏற்றினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில், அமித் ஷா ஏற்றிய கொடி கீழே இறங்கும் காட்சி ஒளிபரப்பானது. 

இதையடுத்து, அமித் ஷா கொடியேற்றும் வீடியோவைப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது, சமூக வலைதளங்களில் ட்ரெண்டான வீடியோவும் இதுவே. போதாக்குறைக்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ட்விட்டரில் வீடியோவைப் பதிவேற்றி பா.ஜ.க-வைக் கலங்கடித்துள்ளனர். காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில், அமித் ஷாவின் வீடியோவை இணைத்து `தேசியக் கொடியைக் கையாள முடியாதவர்கள், எவ்வாறு நாட்டை நடத்துவார்கள்' எனப் பதிவிட்டுள்ளது. நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கடந்த 2016-ல் தேசியக் கொடியை ஏற்றும்போது கொடி கீழே சரிந்து வந்துவிட்டது. இதேபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைமையகத்தில் நவீன் பட்நாயக் தேசியக் கொடியை ஏற்றும்போது கொடி கீழே இறங்கியது.

 

Video Credit: Facebook/James Wesly hunt

Do you like the story?

Please Appreciate the Author by clapping!