இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு! | A 12th century bronze Buddha statue stolen from a museum at Nalanda was returned to India today

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:21:29 (15/08/2018)

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்த சுதந்திர தினப் பரிசு!

கடந்த 1961-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கடத்திச் செல்லப்பட்ட 50 ஆண்டுகளுக்குமேல் பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சிலை

Photo Credit - Twitter/@metpoliceuk

நாட்டின் 72-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட புத்தர் சிலை, இன்று இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள இந்தியத் தொல்பொருள் அருங்காட்சியகத்திலிருந்து கடந்த 1961-ம் ஆண்டு 14 சிலைகள் திருடப்பட்டன. அதில், ஒன்றுதான் இந்த வெண்கல புத்தர் சிலை. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் சிலை, வெள்ளி இழைகள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் இந்த புத்தர் சிலை அடையாளம் காணப்பட்டது. கலைப் பொருட்கள் திருட்டைத் தடுக்கும் இங்கிலாந்தின் ARCA பிரிவு போலீஸார் மற்றும் விஜயகுமார் என்பவர் அளித்த தகவலின் தகவலின் அடிப்படையில் சிலையை இந்தியாவுக்குத் திரும்பவும் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியாவுக்குச் சொந்தமான புத்தர் சிலையை, லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீஸார் திரும்பவும் இந்தியாவிடம் இன்று ஒப்படைத்தனர். 72-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும்வேளையில் கடத்தப்பட்ட புத்தர் சிலை இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டது.