வாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு! | The vice president enquired health condition of former prime minister

வெளியிடப்பட்ட நேரம்: 07:33 (16/08/2018)

கடைசி தொடர்பு:07:33 (16/08/2018)

வாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சைபெற்றுவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.

வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரித்த வெங்கையா நாயுடு’ 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் 11 -ம் தேதி, சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரை  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், நேற்றிரவு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது . அதில் அவருக்கு, ’உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது’ எனத்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து, வாஜ்பாய் உடல்நலம்குறித்து விசாரித்துச் சென்றனர். இந்நிலையில், இன்று காலை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து, சுமார் 20 நிமிடம் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.