வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (16/08/2018)

கடைசி தொடர்பு:11:00 (16/08/2018)

வாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலைபற்றி அறிய, அரசியல் கட்சித் தலைவர்கள் வந்துசெல்கின்றனர். 

அமித் ஷா

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், வயது மூப்பின் காரணமாக சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அனுமதிக்கப்பட்ட இவருக்கு, தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. ஜூலை மாதம் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பல கட்சி அரசியல் தலைவர்கள் நேரில் சென்று இவரின் உடல்நிலைபற்றி விசாரித்தனர். 

வாஜ்பாய் -நலம் விசாரித்துச் செல்லும் வெங்கையா நாயுடு

இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.  உயிர்காக்கும் கருவிகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாலையே பிரதமர் மோடி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். இவரை அடுத்து, இன்று காலை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் சென்று வாஜ்பாயின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தனர். இவர்களைத் தொடர்ந்து,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எய்ம்ஸ் செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

வாஜ்பாய் உடல்நலம்பெற வேண்டுதல்

மேலும், வாஜ்பாய் உடல்நிலை சீராகி, விரைவில் நலம்பெற வேண்டும் என மத்தியப்பிரதேசத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர் யாகம் நடத்தி பிரார்த்தனைசெய்தனர்.