காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கும் ஜலேஷ்வர் கோயில்!- அதிர்ச்சி வீடியோ | Jaleshwar temple in odisha submerged following heavy rain

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/08/2018)

கடைசி தொடர்பு:14:00 (16/08/2018)

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கும் ஜலேஷ்வர் கோயில்!- அதிர்ச்சி வீடியோ

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்துவருகின்றன. அதேபோன்று, கிழக்கு மாநிலமான ஒடிசாவிலும் பேய்மழை பெய்துவருகிறது. 

கேரளா
 

கேரளா மற்றும் ஒடிசாவில், மழையின் தாக்கத்தை உணர்த்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அவை, மனதைப் பதைபதைக்கவைக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால், குடியிருப்புப் பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, கேரளாவில்  இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒடிசா
 

கேரளாவைப் போன்று ஒடிசாவிலும் கனமழை வெளுத்துவாங்குகிறது. சுதந்திர தினமான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், எந்தவிதமான கொண்டாட்டங்களும் நடத்தப்படவில்லை. ஒடிசாவின் கலாஹாண்டி மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கலாஹாண்டியில் அமைந்துள்ள பிரபல ஜலேஷ்வர் கோயில், நேற்று வெள்ளத்தில் மூழ்கியது. ஜலேஷ்வர் கோயிலை வெள்ளம் சூழும் வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

ஒடிசாவில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க