40 நாள் பராமரிப்பு! - சுதந்திர தினத்தில் பிறந்த இந்தியாவின் முதல் பென்குயின் | The Humboldt Penguin chick hatched on August 15 at Mumbai zoo

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (16/08/2018)

கடைசி தொடர்பு:14:40 (16/08/2018)

40 நாள் பராமரிப்பு! - சுதந்திர தினத்தில் பிறந்த இந்தியாவின் முதல் பென்குயின்

இந்தியாவின் முதல் ஹாம்போல்டு வகையைச் சேர்ந்த பென்குயின், நேற்று  மும்பையில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்துள்ளது.

பென்குயின்

பென்குயின்கள், அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வாழ்பவை. பறவை இனத்தைச் சார்ந்த இவைகளால் பறக்க முடியாது. தன் வாழ்நாளில் 75 சதவிகிதத்தை நீருக்கடியில் உணவு தேடியே கழித்துவிடும்.  கடந்த 2016-ம் ஆண்டு  ஜூலை மாதம், தென்கொரியத் தலைநகர் சியோலில் இருந்து  ‘ஹாம்போல்டு’ வகையைச் சேர்ந்த சில பென்குயின்கள் மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவுக்கு எடுத்துவரப்பட்டன. இவை, தென் அமெரிக்க நாடுகளில் அதிகம் வாழ்கின்றன. 

மும்பையைத் தவிர இந்தியாவில் வேறு எந்த உயிரியல் பூங்காவிலும் பென்குயின்கள் இல்லை. இதற்காக பைகுல்லா பூங்காவில் 16-18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில்  சுமார் 1700 சதுர அடிக்கு செயற்கை இடம் உருவாக்கப்பட்டு, அங்கு இந்த பென்குயின்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.  இந்த நிலையில், அங்குள்ள மோல்ட் என்ற ஆண் பென்குயினுக்கும் ஃபிலிப்பர் என்ற பெண் பென்குயினுக்கும் நேற்று இரவு 8:02 மணியளவில்  இந்த பென்குயின் பிறந்தது. இந்தப் பென்குயின்,  இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மோல்ட் என்ற ஆண் பென்குயின் மிகவும் இளவயதான என்றும் ஃபிலிப்பர் என்ற பென்குயின் சற்று வயது முதிர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பென்குயின் முட்டை, சுமார் 40 நாள்களாக  மிகவும் பரிமாரிக்கப்பட்டு வந்ததாகவும், சுதந்திர தினமான நேற்று குட்டிப் பென்குயின் பிறந்துள்ளதாகவும் பூங்கா நிர்வாகிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பிறந்துள்ள பென்குயின், இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு  ஏற்றார்ப்போல மாறிய பிறகே, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.