ஒரே வகுப்பில் படித்த தந்தை மகன் - பாரத ரத்னா வாஜ்பாய் குறித்த சுவாரஸ்யத் தகவல்! | Both vajpayee and his father studied in same class in college

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (17/08/2018)

கடைசி தொடர்பு:12:47 (17/08/2018)

ஒரே வகுப்பில் படித்த தந்தை மகன் - பாரத ரத்னா வாஜ்பாய் குறித்த சுவாரஸ்யத் தகவல்!

முன்னாள் பிரதமர்,  `பாரத் ரத்னா’ வாஜ்பாய் நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீரகத் தொற்று காரணமாகவும் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

வாஜ்பாய்

 தலைவர்கள், பொதுமக்கள் எனப்  பலர் வாஜ்பாய் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துவருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர்  பிரதமராக இருந்து, 5 ஆண்டுகளை முதல் முதலாக நிறைவுசெய்த பிரதமர், வாஜ்பாய் தான். பா.ஜ.க-வின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர், வாஜ்பாய் தான். 1977 - ம் ஆண்டியில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராகப்  பதவியேற்றார். 1992 -ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதைப்  பெற்ற அவர், 1994 -ம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதையும் வென்றார்.     2015-ம் ஆண்டில், நாட்டின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், வாஜ்பாய் படித்த கான்பூர் கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் ஈர்த்துள்ளது. வாஜ்பாய், 1945 -ம் ஆண்டில் எங்கள் கல்லூரியில் எம்.ஏ பொலிட்டிக்கள் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் சட்டம் பயின்றார். அப்போது, அவரது  தந்தை கிருஷ்ண பிகாரி, வாஜ்பாயுடன் படித்தார்” என்றார். இருவரும் ஒரே வகுப்பில் படித்தது மட்டுமல்ல, ஒரே அறையில் தங்கியும் படித்துள்ளனர். இவர்கள் இருவரையும் பற்றி கல்லூரி முழுவதும் பேசத் தொடங்கியதால், பின்னர் இருவரும் வேறு வேறு பிரிவுகளுக்கு மாற்றியது கல்லூரி நிர்வாகம்.  

அந்தக் கல்லூரியில் தான் படித்ததுகுறித்தும், மலரும் நினைவுகள் குறித்தும் தந்தையே நண்பனாகவும், ரூம் மேட்டாகவும் இருந்தது உள்ளிட்ட பலவற்றைப் பற்றி வாஜ்பாய் தன் கைப்பட எழுதிய கடிதம், அந்தக் கல்லூரியில் இருக்கிறதாம்.