`ஒரு நாளைக்கு 20 நிமிடம் இலவசம்’ - கேரளா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய டெலிகாம் நிறுவனங்கள்

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரம் அடைந்ததால் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், இடுக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டன.

கேரளா

Photo Credit -twitter@cpimspeak

எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்டப் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 50,000-க்கும் மேலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்துவருகின்றனர். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் முழு வீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலிருந்து நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

கேரளா

பெருவெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளா மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து சிறுசிறு தீவுகள்போல் காட்சி அளிக்கிறது. நேற்றுவரை 97 ஆக இருந்த உயிரிழப்பு, உச்சகட்டமாக 167 ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்தார். இதனிடையில், வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பி.எஸ்.என்.எல், ஐடியா, வோடஃபோன், ஏர்டெல் உள்ளிட நிறுவனங்கள் இலவச கால் மற்றும் டேட்டா சேவைகளை வழங்கியுள்ளன. 

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள், அதே சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிற சேவை வாடிக்கையாளர்களுடன் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். இவர்களுக்கு, 7 நாள்களுக்கு 1GB இலவச டேட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம், அடுத்த 7 நாள்களுக்கு இலவச கால் மற்றும் டேட்டா சேவையை அதிகரித்துள்ளது. வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன் கட்டணமாக (auto credit) ரூ.30-க்கு இலவச கால் மற்றும் இணைய சேவை வசதியை வழங்கியுள்ளன. இந்த இலவச சேவையைப்பெற, வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைலிலிருந்து CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். அல்லது *130*1# என்ற எண்ணுக்குக் கால் செய்ய வேண்டும். இதேபோல், ஐடியாவும் ரூ.10-க்கு இலவச கால் மற்றும் இணைய சேவைகளை வழங்கியுள்ளன. இதைப் பெற *150*150# என்ற எண்ணுக்குக் கால் செய்ய வேண்டும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!