வலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்

கேரளாவில் ராணுவத்தினர், நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டர் மூலம் மீட்டுச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

கர்ப்பிணி பெண்
 

கேரளாவில் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் நிலச்சரிவுகளால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கத் தேசிய பேரிடர் குழு, இந்தியக் கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. மோட்டார் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு வருகின்றனர். ஹெகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள், மருந்து மாத்திரைகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று மதியம் செங்கனூரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை. ஆனால், வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு வெள்ளநீர் அங்கு சூழ்ந்துள்ளது. அதற்குள் அந்தப் பெண்ணின் பனிக்குடம் உடைந்துவிட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து வந்த கடற்படையினர், ஹெலிகாப்டர் மூலம் கவனமாக அவரை மேலே தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கர்ப்பிணி பெண்
 

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஒரு சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருக்கும் புகைப்படம் இந்தியக் கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!