வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (19/08/2018)

கடைசி தொடர்பு:08:21 (19/08/2018)

மனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக டாக்டர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் வேஷமிட்டு சென்ற நபர் 

காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். ஆனால் அவரைப் பார்க்க மருத்துவமனையில் சில கட்டுப்பாடுகள் விதித்தனர். இதன்காரணமாக திரிபாதியால் அவரது மனைவியைப் எளிதில் பார்க்க முடியவில்லை. இதனால் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் போல வெள்ளை நிற கோட் அணிந்துகொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உலா வந்துள்ளார். ஆனால் இவரது நடவடிக்கையைச் சந்தேகப்பட்ட போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தாம் பெரிய மருத்துவர் எனக் கூறிய திரிபாதியிடம் அடையாள அட்டை காண்பிக்க சொல்லி போலீஸார் வற்புறுத்தியுள்ளனர். 

அவரிடம் அடையாள அட்டை இல்லாததை அடுத்து மனைவியை பார்ப்பதற்காக டாக்டர் வேஷமிட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல்களை தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ரோமிலா பணியா தற்போது வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரத்தில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. மருத்துவமனை பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க