`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..!

தன்னுடன் சண்டையிட்ட காதலியைச் சமாதானப்படுத்த மகராஷ்ட்ரா இளைஞன் ஒருவர் செய்த காரியம் போலீஸாரை திக்குமுக்காடச் செய்துவிட்டது. 

மகாரஷ்ட்ரா - காதலன்

மகாரஷ்ட்ரா மாநிலம், பிம்ப்ரி சிஞ்வாட் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் கெதீகர்(வயது 25). அப்பகுதியில் வளர்ந்துவரும் இளம்தொழிலதிபர். இவர், சமீபத்தில் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் போலீஸாருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அப்படி என்ன செய்தார்...? தன்னிடம் கோபித்துக் கொண்ட பெண் தோழியை சமாதானம் செய்ய திரைப்பட பாணியில் புதுமையான ஒருமுறையை கையில் எடுத்திருக்கிறார். அதாவது, பிம்ப்ரி பகுதியில் உள்ள முக்கிய பிரதான சாலைகளில் பேனர்களை வைத்திருக்கிறார். அதில், `என்னை மன்னித்து விடு (அந்தப் பெண்ணின் பெயர்) கூடவே சிவப்பு நிறத்தில் ஹார்ட் சிம்பள்' இடம்பெற்ற பேனர்களை, முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் பகுதியில் வைத்திருக்கிறார். 

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், `அண்மையில், நிலேஷ்க்கும் அவரது காதலிக்கும் இடையில் ஏதோ சண்டை நிகழ்ந்துள்ளது. அதனால், அவரைச் சமாதானம் படுத்த இப்படியான ஆக்கப்பூர்வ படைப்பை செய்திருக்கிறார் நிலேஷ். அவரது, பெண் தோழி மும்பையிலிருந்து கடந்த 17-ம் தேதி பிம்ப்ரி-க்கு திரும்பி உள்ளார். அதனால், வரும் வழி முழுவதும் சுமார் 300 பேனர்களை நிலேஷ் வைத்திருக்கிறார். இவருக்கு, உதவியாக அவரது நண்பன் விலாஸ் ஷிண்டே இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் இரவில் முக்கிய பிரதான சாலைகளில் பேனர்களை வைத்துள்ளனர். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!