கர்நாடகா வெள்ளம்..! குமாரசாமியிடம் போனில் விசாரித்த பிரதமர் மோடி | PM modi spoke to Karnataka CM

வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (19/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (19/08/2018)

கர்நாடகா வெள்ளம்..! குமாரசாமியிடம் போனில் விசாரித்த பிரதமர் மோடி

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 

மோடி

கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்திலும் கடுமையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால், நூற்றக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கடலோர காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விவகாரம் குறித்த பிரதமர் மோடி ட்விட்டர பதிவில், 'கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன். மத்திய அரசால், முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம்.' என்று பதிவிட்டுள்ளார். 


[X] Close

[X] Close